பிரதமர் ரணிலுக்கு மன்னாரில் கறுப்புக்கொடி

மன்னாரில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4  மாடிக்கட்டிடத்தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

காணாமல் போனோர் பிரச்சனை தொடர்பில் கண்டுகொள்ளதா பிரதமர் மாவட்டச் செயலக திறப்புவிழாவிற்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னார் மாவட்டத்தில் உள்ள காணாமல் போனவர்களது உறவினர்கள் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் பதாதைகளை ஏந்திய கறுப்பு கொடிகளை கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் திறப்பு விழாவிற்கு முன் கதவினால் மாவட்டச் செயலகத்திற்குள் சென்ற போதும்,நிகழ்வு முடிவடைந்த நிலையில் பின் கதவினால் வெளியேறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com