சற்று முன்
Home / செய்திகள் / பிரதமரின் செயலாளர் மற்றும் தகவல் பணிப்பாளர் அதிரடியாக பணி நீக்கம்

பிரதமரின் செயலாளர் மற்றும் தகவல் பணிப்பாளர் அதிரடியாக பணி நீக்கம்

உடன் அமுலுக்கு வரும் வகையில், பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏகநாயக்க, அவரது பதவியிலிருந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நீக்கப்பட்டுள்ளார்.

அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நீக்கப்பட்டு புதிய பணிப்பாளரராக, இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான நாலக களுவெவ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் அப்பதவியை வகித்துவந்த சுதர்ஷன குணவர்தன, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டே, புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ, தகவல் தொடர்பாடல் தொடர்பில், தனக்கு விசுவாசமானவர்கள் எனக் கருதுவோரை நியமிக்கும் நோக்கத்திலேயே, இம்மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனக் கருதப்படுகிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com