சற்று முன்
Home / செய்திகள் / பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவிப்பிரமாணம்

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவிப்பிரமாணம்

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ, சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இலங்கையின் 23ஆவது பிரதமராக அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதோடு, இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, இரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1970ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக பெலியத்த தொகுதியில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, அப்பொழுது பாராளுமன்றத்திற்கு வயது குறைந்த உறுப்பினராக நுழைந்தார். 1989ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். 1994ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவான இவர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் தொழில் அமைச்சராக பணியாற்றினார்.

பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக நியமனம் பெற்றார். 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் இலங்கையின் 13ஆவது பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அதனுடன், நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

2005ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை இலங்கை நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இவர் பதவி வகித்தார். 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவானார். மீண்டும் சிறிதுகாலம் பிரதமராக பதவி வகித்ததுடன், எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com