சற்று முன்
Home / செய்திகள் / பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு இடையூறு செய்தால் எதிர்காலத்தில் கவலைப்பட நேரிடும் – ஜனாதிபதி எச்சரிக்கை

பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு இடையூறு செய்தால் எதிர்காலத்தில் கவலைப்பட நேரிடும் – ஜனாதிபதி எச்சரிக்கை

maithripala-sirisenaஇந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திட முன்னர் அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பித்து பாதகமான விடயங்களை நீக்கி அனைவரும் ஏற்றுககொள்ளும் வகையிவேயே நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எனவே இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் தேவையற்ற சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டை முன்னேற்ற சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வரும் குறுகிய அரசியல் லாபத்திற்காக பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு இடையூறு செய்தால் எதிர்காலத்தில் கவலைப்பட நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கிட்டு குழுநிலை விவாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.
பகலுணவு இடைவேளையின் பின்னர் ஆரம்பமான பாதுகாப்பு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் நடத்தப்பட்ட உரைகளை அவதானித்துக் கொண்டிருந்த ஜனாதிபதி அவற்றுக்கு பதிலளித்து உரையாற்றுகையில் :
தேசிய பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி அரிப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது எக்காரணம் கொண்டும் படையினரை பலவீனப்படுத்த இடமளிக்கப்படமாட்டாது.
நாட்டை முன்னேற்றுவதற்கு  எதிரியையும் நண்பரையும் அறிந்து செயற்பட வேண்டும். கடந்த கால அனுபவங்கள் 30 வருட யுத்த கால அனுபவம் என்பவற்றின் பிரகாரமே தேசிய பாதுகாப்பு குறித்து செயற்பட வேண்டும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சவால்களை இலகுவாக கருதக் கூடாது.
சர்வதேச உறவுகள், வெளிநாட்டுக் கொள்கை என்பன தேசிய பாதுகாப்பில் முக்கியமானவை. நாட்டின் ஸ்திரத்தன்மை தொடர்பில் நாட்டிற்குள் இருந்து எழும் நிலைமைகள் வெளிநாட்டு அமைப்புகளால் ஏற்படும் அச்சுறுத்தல் என்பன குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
யுத்தத்தின் போது சர்வதேச அழுத்தம் ஒத்துழைப்பு குறித்து ஆராய வேண்டும். வெளிநாடுகளின் நல்லுறவை பேணுவது தேசிய உறவில் முக்கிய அம்சமாகும்.
சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடனும் ஏற்புடனும் நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். எமக்கு புதிதாக செயற்படவும், சிந்திக்கவும் இடமளிக்குமாறு நாட்டை முன்னேற்ற ஒத்துழைக்குமாறும் சர்வதேச சமூகத்தை கோரியிருந்தோம்.
யுத்தம் ஏற்பட காரணமான விடயங்களை பற்றி சிந்திக்க வேண்டும்.தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதாரம் எரிசக்தி, மனிதவள அபிவிருத்தி என்பன முக்கியம் வகிக்கின்றன. தேசிய பாதுகாப்பில் முப்படையின் பங்களிப்பிற்கு அப்பால் ஏதும் அச்சுறுத்தல்கள் இருந்தால் அதனை தீர்க்க வேண்டும்.
பொருளாதாரத்தை பலப்படுத்துவதும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவம் அவசியமாகும்.இந்திய – இலங்கை ஒப்பந்தம் தொடர்பில் தேவையற்ற சந்தேகம் கொள்ள வேண்டாம். பல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து பொருளாதரத்தை நாட்டுக்கு ஏற்புடைய வகையிலேயே முன்னெடுப்போம். எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் அதனை அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிப்போம். சகலரும் ஏற்கக் கூடிய ஒப்பந்தத்தையே கைச்சாத்திடுவோம்.
அரசியலமைப்பை தயாரிப்பது தொடர்பிலும் தவறான கருத்துகள் பரப்படுகிறது. இன்னும் உடன்பாடு எதுவும் காணப்படவில்லை. வர்த்தக ஒப்பந்தமோ, புதிய அரசியலமைப்போ புதிய சட்டங்களோ தயாரிக்கையில் நிபுணர்கள், அறிஞர்களின் கருத்தை பெறுவோம். மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியை சிலர் முன்னெடுத்து வருகின்றனர். இனவாதத்தை தூண்டி சிங்கள பௌத்த சிந்தனையை மாற்ற முடியாது.
புதிய தொழில் நுட்பத்துடன் நாம் சைபர் குற்றவாளிகளுக்கு முகம் கொடுக்க வேண்டும.; தேசிய பாதுகாப்பிற்கு உச்ச அளவில் முக்கியம் வழங்கி வருகிறோம். ஒரு போதும் தேசிய பாதுகாப்பை நாம் பலவீனப்படுத்தவில்லை. எதிர்கால பிரச்சினைகளுக்கு நாடு என்ற ரீதியில் இப்பொழுதே தயாராக வேண்டும். எதிர்கால நலனுக்காக பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்றேல் எதிர்காலம் இருளாகவே அமையும்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் சிலர் விமர்சித்தாலும் மாற்று யோசனை எதுவும் முன்வைப்பதில்லை. தேசிய மற்றும் அரச பாதுகாப்பு தொடர்பில் எத்தகைய விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும் இராணுவத்தை பலப்படுத்துவோமே தவிர பலவீனப்படுத்த மாட்டோம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com