சற்று முன்
Home / செய்திகள் / பின்லேடன் உயிருடன்தான் இருக்கிறார்: யுஎஸ் உளவு ரகசியங்களை வெளியிட்டவர் தகவல்!

பின்லேடன் உயிருடன்தான் இருக்கிறார்: யுஎஸ் உளவு ரகசியங்களை வெளியிட்டவர் தகவல்!

மாஸ்கோ: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்று அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எர்வர்டு ஸ்னோடன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எட்வர்டு ஸ்னோடன், தற்போது ஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மாஸ்கோ டிரிபியூன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். பஹாமாஸில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஒசாமா தற்போதும் அமெரிக்காவின் சிஐஏ ஊழியர்கள் பட்டியலில் உள்ளார். அவருக்கு மாதாமாதம் 6 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் அமெரிக்கா அளித்து வருகிறது.

பாகிஸ்தானில் ஒசாமா கொல்லப்பட்டது போன்று பொய்யான நாடகத்தை அமெரிக்கா நடத்தியது. ஒசாமா மற்றும் அவரது குடும்பத்தாரை பஹாமாஸில் யாருக்கும் தெரியாத இடத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த நாடகத்திற்கு பாகிஸ்தான் உளவுப்படையும் துணை போனது.

தாடியும், ராணுவ ஜாக்கெட்டும் இல்லாமல் ஒசாமாவை யாராலும் அடையாளம் காண முடியாது. ஒசாமா உயிருடன் தான் உள்ளார் என்பதை நான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். அந்த புத்தகம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது” என்று கூறினார்.
ஒசாமா உயிருடன் இருக்கிறார் என்று ஸ்னோடான் வெளியிட்டுள்ள தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

#ஒசாமா பின்லேடன் #ஸ்னோடன் #அமெரிக்கா

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com