பின்னணிப் பாடகர் பிரமாண்ட குரல் தேடலில் பரிசு பெற்றது எப்படி ! அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்திய தனியார் தொலைக்காட்சி நடாத்திவரும்  சுப்பர் சிங்கர் 5 பிரமாண்ட குரலிற்கான தேடல் நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணிப் பாடகர் ஒருவர் போட்டியாளராகப் பங்குபற்றி இறுதிப்போட்டிக்கு தெரிவாகி சுப்பர் சிஙகர் பட்டம்வென்று வீடு ஒன்றினைப் பெற்றுக்கொண்ட விசித்திர நிகழ்வு நடைபெற்றுள்ளது. 
கடந்த 2012 ஆம் ஆண்டுமுதல் மலையாளம் மற்றும் தழிழ்ப் படங்களில் 10 இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்பவரே போட்டியாளர் தேர்விற்குள் உள்வாங்கப்பட்டு பின்னர் இடையில் போட்டியிலிருந்து நீக்கி wild card entry, ஊடாக மக்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்யப்படுவதாக உள்ளீர்க்கப்பட்டு இறுதிப்போட்டியில் பாடவைக்கப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரிற்கு தொலைபேசி வலைப்பின்னல் நிலையம் ஒன்றினால் 70 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆனந்த் அரவிந்தாக்ஷன் பாடியுள்ள பாடல்களில் சில…
1. 10 எண்ணுறதுக்குள்ள (2015) – கானா கானா தெலுங்கானா
2. மத யானைக் கூட்டம் (2013) – கொம்பு ஊத்தி
3. பாண்டிய நாடு (2013) – வெறி கொண்ட புலி ஒன்று
4. ஆரோகணம் (2012) – இந்த வான்வெளி விடியாதோ
5. நீர்ப்பறவை (2012) – யார் வீட்டு மகனோ
6. இவன் வேற மாதிரி (2013) – தனிமையிலேயே
7. அன்னையும் ரசூலும் (மலையாளம்) – வழிவக்கில்
8. அன்னையும் ரசூலும் (மலையாளம்) – யானமேhttps://www.youtube.com/watch?v=hbIN9JIOsA0
குறித்த தொலைக்கட்சி கடந்த வருடம் நாடாத்திய பிரமாண்ட குரல் தேடல் போட்டியில் கனடாவாழ் ஈழத்து சிறுமி வாக்கு அடிப்படையில் முதலிடம் பெற்றிருந்தநிலையிலும் அவரை இரண்டாவது இடம்பெற்ற வெற்றியாளர் என அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com