பிணை இல்லை – விமல் உண்ணாவிரதம்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி கைதான விமல் வீரவங்ச எம்.பி., தமக்கு இதுவரை பிணை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, வெலிக்கடை சிறைச்சாலையில் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டை நீதிமன்றத்தினால் விமல் வீரவங்சவுக்கு ஏப்ரல் 03 ஆம் திகதி வரை விதிக்கப்பட்ட விளக்கமறியலுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த பிணை மனு நேற்றைய தினம் (21) உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com