பிக்குவைக் கைது செய்ய ஆதார ஆவணம் கேட்கிறது பொலிஸ் !

vakeesam-braking-newsபிக்குவின் செயற்பாடுகள் குறித்து வைிசாரணை நடத்துகின்றோம் எனத் தெரிவித்தபொலிசார் விசாரணைகளின் பின் அவரைக் கைது செய்யக்கூடிய ஆவணங்கள் ஏதும் இருக்குமாக இருந்தால் அவரைக் கைது செய்வதாகவும் தெரிவித்தால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நடு வீதியில் பொதுமக்கள் மற்றும் பொலிஸ் அதிகாரி முன் குறித்த பிக்கு அநாகரீகமாக நடந்துகொண்ட நிலையில் பொலிசார் அவரைக் கைது செய்வதற்கு ஆதரா ஆவணம் கேட்டபது வியப்பாக உள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தினை பூட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று செவ்வாய்க்கிழமை காலை (15-11-2016) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலை 8.30மணியளவில் பட்டிப்பளை பிரதேச சிவில் சமூக அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிரதேச செயலக வாயில் கதவினை பூட்டியும் கொக்கட்டிச்சோலை-வெல்லாவெளி பிரதான வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்போது சம்பவ இடத்துக்கு வந்த களுவாஞ்சிகுடி பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் சிசிர தெத்ததந்திரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தினார் அதன்போதே பொலிஸ் அதிகாரி பிக்குவின் செயற்பாடுகள் குறித்து வைிசாரணை நடத்துகின்றோம் எனத் தெரிவித்தபொலிசார் விசாரணைகளின் பின் அவரைக் கைது செய்யக்கூடிய ஆவணங்கள் ஏதும் இருக்குமாக இருந்தால் அவரைக் கைது செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com