சற்று முன்
Home / செய்திகள் / பிக்குவின் உடல் எரித்ததால் நீராவியடி பிள்ளையாரில் அசுத்த நிவர்த்திப் பூசை

பிக்குவின் உடல் எரித்ததால் நீராவியடி பிள்ளையாரில் அசுத்த நிவர்த்திப் பூசை

முல்லைத்தீவு- நீராவியடி பிள்ளையாா் கோவில் வளாகத்தில் அத்துமீறித் தங்கியிருந்த பௌத்த பிக்கு கடந்த மாதம் மரணமடைந்த நிலையில்.அந்தப் பிக்குவினுடைய உடலை நீதிமன்ற உத்தரவினை மீறி

ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்திருந்தனர். இந் நிலையில் இவ்வாறு இடம்பெற்ற இந்த துர் சம்பவத்தையடுத்து

விசேட சாந்தி பூசை நிகழ்வொன்றை 11.10.2019 இன்றையநாள் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் ஒழுங்குசெய்திருந்தனர். விசேடமாக விநாயகருக்கு அபிசேகங்கள் இடம்பெற்றதுடன்,

பிக்குவினுடைய உடல் தகனம் இடம்பெற்று, கோவில் வளாகம் அசுத்தப்படுத்தப்பட்டதால், அதை நிவர்த்தி செய்யும்பொருட்டு கொடும்பாவி கட்டி இழுக்கப்பட்டு, எரிக்கப்பட்டு

விசேட சாந்தி பூசை நிகழ்வுகளும் இடம்பெற்றன.அத்துடன் அசுத்தப்படுத்தப்பட்ட கோவில் வளாகம் மற்றும், கோவில் தீர்த்தக் கேணி வளாகம் என்பவற்றைத் தூய்மைப்படுத்தும் நோக்கில்,

மஞ்சள் கலந்த நீர் தெளிக்கப்பட்டது.பூசை வழிபாடுகளை அடுத்து, அன்னதான நிகழ்வும் ஆலய வளாகத்தில் இடபெற்றது.இந்த பூசை வழிபாடுகளில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,

கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் உட்பட கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பெருந்திரளான அடியவர்களும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com