சற்று முன்
Home / செய்திகள் / பிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின், விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்திற்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

நேற்று முன்தினம் உயிரிழந்த கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் வளாகத்தில் தகனம் செய்ய பௌத்த பிக்குகள் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று வரை சடலத்தை புதைக்கவோ தகனம் செய்யவோ கூடாதென இடைக்கால தடை விதிக்கப்பட்டிடிருந்தது.

இன்று காலை இந்த வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் சார்பாக, சட்டத்தரணிகள் அன்ரன் புனித நாயகம் தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

இரு தரப்பும் தமது வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து, ஆலய வளாகத்திற்கு வெளியில் பிக்குவின் உடலை புதைப்பதற்கு ஆட்சேபணையுள்ளதா என பிள்ளையார் ஆலய நிர்வாகத்திடம் நீதிவான் கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் ஆலோசித்து பதிலளிக்குமாறு அவகாசம் வழங்கினார்.

சிறிய இடைவேளையின் பின்னர் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, ஆலய வளாகத்தில், சூழலில் பிக்குவின் உடலை புதைப்பதை தாம் எதிர்ப்பதாக ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. உடலை அடக்கம் செய்வற்கு உரிய இடங்களிலேயே அடக்கம் செய்வதே பொதுவிதியென்பதையும் சுட்டிக்காட்டி, உடலை அடக்கம் செய்ய சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யும்படி கோரினர்.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் ஆலயத்திற்கு அப்பால் உள்ள இராணுவ முகாமிற்கு அண்மையலுள்ள கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவிட்டார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com