சற்று முன்
Home / செய்திகள் / பிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்ய நீதிமன்றம் தடை

பிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்ய நீதிமன்றம் தடை

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில், பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்ய தடைவிதித்து முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, பிக்குவின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தார் அமைச்சர் மனோ கணேசன்.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில், கொலம்பே மேதாலங்காதர தேரர் சட்டவிரோதமாக ஒரு விகாரை அமைத்து, அதற்கு குருகந்த ரஜமகா விகாரையென பெயர் சூட்டியிருந்தார். அரச நிர்வாக அலகுகளும் அவருக்கு துணைபுரிய, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபட இடையூறு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அவர் நேற்று புற்றுநோயால் உயிரிழந்தார்.

அவரது உடலை ஆலய வளாகத்திலுள்ள விகாரையில் தகனம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, நேற்று அந்த பகுதி பொதுமக்கள் பொலிசாரிடம் இது குறித்து முறையிட்டனர்.

இந்த விடயம் குறித்து நேற்று இரவு முல்லைத்தீவு மேலதிக நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்ற பொலிசார், ஆலய வளாகத்தில் பிக்குவின் உடலை தகனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், சடலத்தை அங்கு கொண்டு வந்து அஞ்சலி செலுத்துவதை தடை செய்ய முடியாதென நீதிமன்றம் தெரிவித்தது.

இதேவேளை, முன்னதாக அமைச்சர் மனோ கணேசனின் கவனத்திற்கும் இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டது. முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் பிரதேசத்திற்குரிய தவிசாளர் ஆகியோரை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்ட மனோ, அதற்கு இடமளிக்க வேண்டாமென கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com