பாவனைக்கு உதவாத நானுஓயா எடின்புரோ தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதை

img-20160913-wa0004நானுஓயா எடின்புரோ தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதை ஜந்து வருடங்களுக்கு முன்பதாக இரண்டு சில்லுகள் செல்லும் அளவிற்கு கொங்கீறிட் பாதையாக புனரமைக்கப்பட்டது.

பல லட்சம் ரூபா செலவில் இப்பாதை செப்பணியிடப்பட்டபோதிலும் மக்களின் பாவனைக்கு உகந்த நிலையில் காணப்படவில்லை.

இதன் காரணமாக இத்தோட்ட மக்கள் போக்குவரத்து செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இப்பாதை இவ்வாறு புனரமைக்கப்பட்ட போதிலும் முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் செல்ல முடியாமல் இருப்பதனால் பயணிகள் உள்ளிட்ட சாரதிகளும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அத்தோடு இத்தோட்டத்தில் உள்ள நோயாளர்கள் அதிகமாக முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைகளுக்கு செல்வதால் முச்சக்கரவண்டியில் செல்ல முடியாமல்  பல இடர்களை சந்தித்து வருகின்றனர்.

பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு நானுஓயா நகர சன்சயின் முச்சக்கரவண்டி சாரதி சங்கம் ஏற்பாட்டில் 13.09.2016 அன்று காலை 07 மணிமுதல் 11 மணி வரை சிரமதான பணியின் மூலம் பாதையில் காணப்பட்ட குழிகளுக்கு கற்கள் மற்றும் மண் போட்டு நிரப்பபட்டது.

இந்த சிரமதான பணியில் 20 பேர் கலந்துகொண்டனர். இதற்கான செலவுகளை சாரதிகள் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

எனவே மலையகத்தில் பாதை அபிவிருத்திகள் செய்யும் போது முறையாகவும் மக்கள் பயனபடுத்த கூடிய வகையில் மேற்க்கொள்வது மலையக அரசியல் தலைவர்களின் கடமையாகும்.
img-20160913-wa0005 img-20160913-wa0006 img-20160913-wa0007 img-20160913-wa0009 img-20160913-wa0011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com