பாரிஸில் துப்பாக்கி சூடு, வெடிகுண்டு வெடிப்பு 153 பேர் பலி : பிரான்ஸில் அவரச நிலை

பாரிஸ் :பாரிஸில்தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 153 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பிரான்சில் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று பிரான்ஸ் மற்றும் உலகச்சாம்பியன் ஜெர்மனி அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாரிஸில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ்  மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
அதோடு மைதானத்திற்கு வெளியேவும் ஆயிரக்கணக்கானோர் பெரிய திரையில் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தனர்.அப்போது தீவிரவாதிகள் சிலர் கூட்டத்தில் புகுந்துகண்மூடித்தனமான துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அந்த இடத்தில் வெடிகுண்டுகளும் வெடித்ததாக கூறப்படுகிறது.இதில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். 
 
அதுபோல் பாரிஸின் கிழக்குப் பகுதியில் பட்டாச்சான் என்ற சினிமா ஹால் உள்ளது. இங்கு துப்பாக்கியுடன் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலர் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலியாகியுள்ளனர். 

இப்படி பாரிஸில்  7 இடங்களில் நேற்றிரவு நடந்த வெடிகுண்டு வைப்பு மற்றும் துப்பாக்கி சூட்டில் 153 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். ஏராளமான பொதுமக்களையும் தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அவசர நிலை பிரகடனம்
பாரிஸில் இந்த சம்பவத்தை தொடர்ந்து அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.பிரான்ஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக தனது நாட்டு எல்லைகளை மூடியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல் மனிதத்தன்மையற்றது. இரக்கமே இல்லாமல் இந்த தாக்குதலை எதிர் கொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் ஹோலான்டே கூறியுள்ளார். 1500 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
பாரிஸ் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் ஆறு இடங்களில் ஒன்று  Stade de France கால்பந்து மைதானம். அங்கே ஜெர்மனிக்கும்,பிரான்சுக்குமிடையே கால்பந்து போட்டியின் 81,000 பார்வையாளர்களுள் ஒருவர் ஃபிரான்ஸ் அதிபர்  ஹோலேண்டே. குண்டு சத்தம் கேட்டதுமே அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றுவிட்டார்களாம்.
பாரிஸ் நகரில் நேற்று நள்ளிரவு பல இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு தாக்குதல்களுக்கு ஐ.எஸ் இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
பாரிஸில் ஆறு இடங்களில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் எட்டு பேர் பலியாகியுள்ளனர். இதில் ஏழு தீவிரவாதிகள் வெடிகுண்டு பெல்ட் மூலம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மேலும் சிலர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு முதல்முறையாக பாரிஸில் ஊரடங்கு உத்தரவு.


அமெரிக்க அதிபர் ஒபாமா ‘இது மனிதத்தன்மைக்கு எதிரான தக்குதல். பிரான்ஸ் மக்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வோம் என்று கூறியுள்ளார்.
“This is an attack on all of humanity and the universal values that we share.” —@POTUSon the attacks in Parishttps://t.co/yQThOvrdxZ

— The White House (@WhiteHouse)November 13, 2015

இந்திய பிரதமர் மோடி” பிரான்ஸில் இருந்து வரும் தகவல்கள் மிகவும் கவலையளிக்கின்றன. பயங்கரமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. பங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக இறைவனைப்  பிரார்த்திக்கிறேன். பிரான்ஸ் மக்களின் துயரத்தில் நாம் கூட்டாக பங்கெடுத்துக் கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
News from Paris is anguishing & dreadful. Prayers with families of the deceased. We are united with people of France in this tragic hour.

— Narendra Modi (@narendramodi)November 13, 2015

இதனையடுத்து ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதாக இருந்த பிரான்ஸ் அதிபரின் துருக்கி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com