பாராளுமன்றில் மாவைக்கு திடீர் உடல்நலக் குறைவு – வைத்தியசாலையில் அனுமதி

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மதியம் (O9) கொழும்பு ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வாகீசம் இணையம் வலி வடக்குப் பிரதேச சபைத் தலைவர் சுகிர்தனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று காலையும் வீட்டில் அவர் இரு தடவைகள் சோர்வுற்று மயக்கமடைந்ததாகவும்  எனினும் சிறிய சோர்வு எனக் கருதி அவர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டதாகவும் அதன் போது அவர் மீண்டும் சோர்வுற்று மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், தலைவர் மாவை சேனாதிராஜா தற்போது பூரண நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com