பாரதியார் நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு.

யாழ்.நல்லூர் பின் வீதியில் உள்ள வைமன் வீதி சந்தியில் உள்ள, பாரதியார் சிலைக்கு, பாரதியார் உருவப்படம் பொறிக்கப்பட்ட ரீசேர்ட் அணிந்த இளைஞர்கள் , ஞாயிற்றுக்கிழமை மாலை மலர் மாலை அனுவித்து, விளகேற்றி, அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் நினைவு தினத்தை முன்னிட்டு, வீதியால் சென்றவர்களுக்கு,
இலவசமாக மரக் கன்றுகளையும் வழங்கி வைத்தனர்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1882-ம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்தார். தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897-ம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.

பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும், மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

இவருடைய கவித்திறனை பாராட்டி ‘பாரதி’ என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரச சபையால் வழங்கப்பட்டது.

1921 ஆம் ஆண்டு யூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். பிறகு 1921ல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு இறந்தார்.

கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். யானை மிதித்து இறந்ததாகத் தகவல்கள் இருந்தாலும், நோய்வாய்ப்பட்டு இறந்ததே உண்மை. அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.

– படங்கள் – ஐ.சிவசாந்தன்.

dsc_0077 dsc_0093 dsc_0094 dsc_0095 dsc_0099 dsc_0103 dsc_0106 dsc_0109 dsc_0110 dsc_0117 dsc_0120

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com