சற்று முன்
Home / செய்திகள் / பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு ?? மர்மத் தொலைபேசி மிரட்டலால் பதறிய பொலிஸ்

பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு ?? மர்மத் தொலைபேசி மிரட்டலால் பதறிய பொலிஸ்

பாம்பன் சாலை பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததை தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். போலீஸாரின் இந்த கொடூர செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. தூத்துக்குடியில் போலீஸாரின் வாகனங்கள் பல தீயிட்டு எரிக்கப்பட்டன. நேற்று மாலை  உடன்குடியில் இருந்து நெல்லை சென்ற அரசுப் பேரூந்து கருங்குளம் அருகே தீயிட்டு எரிக்கப்பட்டது. இதனிடையே தூத்துக்குடியில் இன்று அல்லது நாளைக்குள் அமைதி திரும்பும் என சிறப்பு கண்காணிப்பு அலுவலராக சென்றுள்ள டேவிதார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிராக இன்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனிடையே நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாம்பன் சாலைப் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னையில் உள்ள தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் வந்துள்ளது. இதையடுத்து இத்தகவல் மாவட்ட காவல் துறையின் மூலம் பாம்பன் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மெட்டல் டிடெக்டர் கருவியுடன்  பாம்பன் சாலைப் பாலத்திற்கு சென்ற பாம்பன் போலீஸார் பாலத்தில்  வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர்.

இன்று விடுமுறை தினம் என்பதால் ராமேஸ்வரம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பாம்பன் சாலை பாலத்தில் நின்றவாறு கடலின் அழகை ரசித்து கொண்டிருந்த நிலையில் போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறபடுத்தினர். மேலும் பாலத்தில் வாகனங்களை நிறுத்தவும் போலீஸார் தடை விதித்தனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி தலைமையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் வெடிகுண்டு செயல் இழப்பு கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் பாம்பன் பாலத்தில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே போலீஸார் நடத்திய விசாரணையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்ததாக தெரியவந்துள்ளது என ராமேஸ்வரம் டி.எஸ்.பி மகேஸ் கூறியுள்ளார். இது குறித்து போலீஸார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com