சற்று முன்
Home / செய்திகள் / பாம்பன் இரயில் தூக்குபாலத்தில் படுத்து போராட்டம் வாழ்வுரிமை கட்சியினர் கைது

பாம்பன் இரயில் தூக்குபாலத்தில் படுத்து போராட்டம் வாழ்வுரிமை கட்சியினர் கைது

ராமேஸ்வரம் செப் 28,
பாம்பன் ரயில் தூக்குபாலத்தில் தண்டாளவாளத்தில் படுத்து போராடிய தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்  
இன்று காலை பாம்பன் இரயில் தூக்கு பாலத்தின் தண்டவாளத்தில் படுத்து ராமேஸ்வரத்திலிருந்து புவனேஷ்வரி செல்லும் விரைவு வண்டியை நிறுத்த   இநதிய அரசுக்கு எதிராகவும் சர்வதேச விசாரணைக்கு ஜ.நா. தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும், என வழியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்  இத்தகவல் அறிந்த இரயில்வே போலீஸார் இரயிலை பாமபன் இரயில்நிலையத்தில் நிறுத்தபட்டது இதனால்  பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து போலீஸார் போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினார்கள் இதனையடுத்து இரயில் புறப்பட்டுச் சென்றது 


இப் போராட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் சிவகங்கை  ஒருங்கினைப்பாளர் முருகானந்தம்,
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு  ஜ.நா  மன்றத்தில்  இலங்கையின் மீது  சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் எனவும்  தமிழக சட்டமன் மன்றத்தில் இலங்கையின் மீது  பொருளாதார தடைவிதித்து ஈழத் ;தமிழர்களிடம்  பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கொன்டுவந்த தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதே போல நடாளுமன்னறத்திலும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் முந்தைய ஆட்சிக்காலத்தில் ஆயுதங்கள் வழங்கி தமிழ் இனத்தை அழித்ததைப்போல தற்போதைய மத்திய அரசு இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு முட்டுக்கட்டையையாக இருப்பதை கைவிட வேண்டும் எனவழியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துவதாக  தெரிவித்தார்.


About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com