சற்று முன்
Home / செய்திகள் / பாபர் மசூதி நிலம் இந்துக்களிடம் கையளிப்பு – இராமர் கோவில் கட்டவும் அனுமதி – இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் – உச்சநீதிமன்றம் சற்று முன் தீர்ப்பு

பாபர் மசூதி நிலம் இந்துக்களிடம் கையளிப்பு – இராமர் கோவில் கட்டவும் அனுமதி – இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் – உச்சநீதிமன்றம் சற்று முன் தீர்ப்பு

இந்தியாவின் மிகப்பெரும் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே வழங்குவதாக உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது. குறித்த நிலத்தில் இராமர் கோவில் கட்டவும் உச்சநீதிடன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை அயோத்தியில் உத்தரப் பிரதேச அரசு இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் அதனை மூன்று மாதத்திற்குள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அயோத்தியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த மாற்று இடம் வழங்கப்படும் என்றும் பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையது தான் என இஸ்லாமிய அமைப்புக்கள் நிரூபிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு
பாபர் மசூதி கட்ட புதிதாக வேறு ஒரு இடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த வழக்கின் தீர்ப்பில்…..

காலியாக இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை.
அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மசூதிக்கு கீழே இருந்த கட்டுமானங்கள் இஸ்லாமிய கட்டுமானங்கள் இல்லை என தொல்லியல் துறை கூறுகின்றது.
கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்பதற்கும் ஆதாரங்கள் தொல்லியல் துறையிடம் இல்லை.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரு மத வழிபாடும் இடம்பெற்றிருக்கிறது.

தொல்லியல் துறையின் தரவுகள் ஆதாரங்களை ஒதுக்கிவிட முடியாது – எனவும் நீதிபதிகள் தெரிவிப்பு

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com