பான் கீ மூன் வருகையை முன்னிட்டு யாழில் கவனயீர்ப்பு – மக்கள் முன்னணி

TNPF-LOGOஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீ மூன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (02-09-2016) யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ள நிலையில் அவரது கவனத்தையீர்க்கும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியமக்கள் முன்னணி அறிவித்துள்ளது. இது தொடர்பில் இந்த அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை வருமாறு,
ஐ.நா செயலாளர் நாயக்தின்  விஜயத்தின்போது
⦁ யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளாகியும் மீள் குடியேற அனுமதிக்கப்படாதுள்ள மயிலிட்டி, பலாலி உள்ளிட்ட வலிவடக்கு, கேப்பாபிலவு உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தியும்!
⦁ போரின் போதும், அதற்குப் பின்னரும் கடத்தப்பட்டும், சரணடைந்தபின்னர் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென கண்டறிய வலியுறுத்தியும்!
⦁ அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்!
⦁ போர்க்குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும்!
உட்பட தமிழ் மக்கள் எதி;நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் அமைப்புக்கள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்புக்கள், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அமைப்புக்கள் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்தவுள்ள மேற்படி போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அழைக்கின்றோம்.
திகதி: 02-09-2016 (வெள்ளிக்கிழமை)
நேரம்: காலை 11.30 மணிக்கு ஆரம்பம்
இடம்: யாழ் பொது நூலகம் முன்பாக

நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com