சற்று முன்
Home / செய்திகள் / பாதைவிலகி தண்டம்புரண்டது பஸ் – 37 பேர் படுகாயம் !!

பாதைவிலகி தண்டம்புரண்டது பஸ் – 37 பேர் படுகாயம் !!

வலப்பனை நில்தண்டாஹின்னவிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தெறிபாஹா நோக்கி பயணித்த தனியார்  பஸ் ஒன்று நில்தண்டாஹின்ன தெறிபாஹா பிரதான வீதியில் அபன்எல்ல பகுதியில் 27.02.2018 அன்று காலை 9 மணியளவில் வீதியை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 37 பேர் படுங்காயம்பட்டு வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 37 பேரில் 13 பேர் நுவரெலியா வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் தெறிபாஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com