பாதுகாப்பு வசதிகளற்று பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் – மலையத் தலைவர்கள் கவனத்திற்கு

IMG_6076
IMG_6081
பெருந்தோட்ட பகுதியில் தேயிலை மலையில் தொழிற் செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலையில் தொழில் செய்து வருவதாக தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தோட்ட தொழிலாளர்கள் மழை, வெயில் பாராமல் தங்களுடைய வருமானத்திற்காக ஒவ்வொரு நாளும் தொழிற் செய்யும் இடத்தில் பல இடர்களை சந்தித்து வருவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மலையக பகுதியில் தொடர்ச்சியாக குளவி கொட்டுக்கு இழக்காகும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இழக்காகி வரும் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பின் வீடு திரும்பிய பின்னர் வருமான ரீதியாக பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் அங்கலாகிக்கின்றனர்.IMG_6070

இவ்வாறு பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் முறையான சலுகையும் வழங்கப்படுவதில்லை என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாறாக அன்றைய தினம் மாத்திரமே சம்பளத்தை வழங்கும் தோட்ட நிர்வாகத்தினர் தொழிலாளர்கள் 2 அல்லது 3 நாட்கள் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெரும் பட்சத்தில் அவர்களுக்கான எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என தொழிலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.vlcsnap-2016-06-14-12h41m27s249

தேயிலை செடிகளில் அதிகமான மரங்களில் குளவி கூடுகள் கட்டியுள்ளதால் அப்பகுதியில் தொழிலாளர்கள்  கொழுந்து பறிக்கும் பொழுது நிம்மதியற்ற நிலையில் அச்சத்தில் தொழில் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அத்தோடு சில் தொழிலாளர்கள் தங்களுக்கு ஆபாத்தான நோய்கள் இருக்கும் பட்சத்தில் குளவி கொட்டும் பொழுது தப்பித்து ஓட முடியாத அளவிற்கு பல்வேறுப்பட்ட இடர்களை சந்திப்பதாகவும், இதனால் சிலர் உயிரிழக்க வேண்டிய சந்தரப்பங்களும் இடம்பெறுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்ட தேயிலை மலைகளில் குளவிகளை அப்புறப்படுத்துவதற்கு அல்லது அதிலிருந்து தொழிலாளர்களை காப்பாற்றப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கின்ற போதிலும் அதற்கு அத்திட்டம் உகந்ததாக இல்லை எனவும் அதிகாரிகள் அதற்கு கூடிய அக்கறை காட்டுவதில்லை எனவும் தொழிலானர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.IMG_6078

எனவே தோட்ட தொழிலாளர்களின் வருமானத்தை மாத்திரம் நோக்காக கொண்டு செயல்ப்படும் அதிகாரிகள் தொழிலாளர்களின் பாதுக்காப்பில் கூடிய அக்கறை செலுத்துவது கட்டாயமாகும்.

நாட்டில் பல்வேறுப்பட்ட தொழில்களை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு பாதுக்காப்பு திட்டங்களையும் காப்புறுதி திட்டங்கள் இருக்கின்ற பொழுதிலும் மிகவும் ஆபத்தான தொழிலை மேற்கொள்ளும் தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்விதமான பாதுகாப்பு திட்டங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை.

இதனால் தோட்ட தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலை மேற்கொள்வதில் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.IMG_6065
IMG_6071

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com