பாதுகாப்பு நிலமைகளை ஆராய யாழ் பயணமாகும் மகாநாயக்க தேரர்!

வடக்கின் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு அஸ்கிரிய மகாநாயக்க தேரர் இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு  வரவுள்ளார்.

எதிர்வரும் 28ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி  வரை வடக்கிற்கு பயணம் செய்யவுள்ள அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக நேரில் ஆராய்வார் என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

லெப் ஜெனரல் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் தடவையாக அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது வடக்கின் நிலமைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை வடக்கின் நிலமைகளை ஆராய நேரில் வருமாறு லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அழைப்பு விடுத்திருந்தார்.

இவ்வழைப்பை ஏற்றுக்கொண்ட மகாநாயக்க தேரர் எதிர்வரும் 28,29ஆம் திகதிகளில் வடக்கிற்கு வரவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com