பாதீட்டுக்கு ஆதரவளிப்பது குறித்து கூட்டமைப்பு இன்று முடிவு!

2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(16) இடம்பெறவுள்ளது. கடந்த 9ம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்தார்.

இதற்கமைய, கடந்த 10ம் திகதி முதல் இது குறித்த விவாதங்கள் இடம்பெற்று வருவதோடு, இன்று மாலை 05.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அத்துடன், நாளை முதல் டிசம்பர் 9ம் திகதி வரை வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறும்.

இந்தநிலையில், இம்முறை வரவு செலவுத் திட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாக, பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், பாதீட்டுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இன்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறுதி முடிவு எடுக்கவில்லை என செய்திகள் வௌியாகியுள்ளன.

இன்று காலை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்படும் என, பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பாதீட்டுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com