பாதீடு 2018 – முழு விபரம்


05:46 PM

நாளை (10) காலை 9.30 மணிக்கு, நாடாளுமன்ற சபை நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கும் என்று, சபாநாயகர் அறிவித்தார்.


05:45 PM

2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாசிப்பை, அமைச்சர்  மங்கள சமரவீர முடித்துக்கொண்டார்.

 


05:44 PM

குறுந்தகவல் மூலம் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு வரி அறவிடப்படும்.


05:42 PM

உள்நாட்டு அல்லாத வெளிநாட்டு மதுபானங்களுக்கு வரி


05:40 PM

வங்கிப் பரிமாற்றல்களுக்காக 1000 ரூபாய்க்கு 20 சதம் வரி அளவிடப்படும்.


05:39 PM

தன்னால், தனியா இருந்துகொண்டு, நாட்டின் கடன்களை செலுத்தமுடியாது என்று, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.


05:38 PM

2018ஆம் ஆண்டுக்குள்,   1.9 டிரில்லியன் ரூபாய் கடன் செலுத்தப்படவேண்டும்.

 


05:33 PM

 காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கு 1.4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது


05:30 PM

தம்புளை மற்றும்  கொழும்புடன் இணைக்கப்பட்ட நவீன​ பொருளதார மையமொன்று, யாழ்ப்பாணத்தில் நிறுவப்படவுள்ளது.


05:29 PM

வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணத்தில், கடன் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளவர்களுக்கு, சிறிய வட்டியினாலான கடன் வசதிகள் வழங்குவதற்கு, 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


05:28 PM

ஓய்வுக்குப் பின்னர், எதிர்காலத்துக்கான விவசாய காப்பீடு.


05:27 PM

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் 50,000 ​செங்கல் வீடுகள் நிர்மாணிக்கப்படும். வடக்கு கிழக்கு வீடமைப்புக்கு 3 பில்லியனும் பெருந்தோட்டத்துக்கு 2 பில்லியனும்.


05:22 PM

கலைஞர்களுக்கான மருத்துவ காப்பீடு.


05:21 PM

தொல்பொருள் தளங்களின் புனரமைப்புக்கு, 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


05:19 PM

இரத்தினபுரி, வெலிமடை நீதிமன்ற வளாகங்களை, மாற்ற இடங்களுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை.


05:19 PM

பௌத்த வாசிகசாலையொன்றை அமைப்பதற்கு, 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு,


05:13 PM

நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, நவீன பதிவு செய்யக்கூடிய வகையிலான இயந்திரங்களுடன் கூடிய வசதிகளுக்கு 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


05:11 PM

அமைதிப்படைக்கு, இலங்கையில் இருந்து அனுப்பப்படும் இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்குமாறு, ஐ.நா கோரியுள்ளது. அதில் பங்கேற்கும் இராணுவத்துக்கு பயிற்சியளிப்பதற்கு 750 மில்.ஒதுக்கீடு,


05:10 PM

பொலிஸ் மற்றும் குற்றப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு, 500 மில்லியனுக்கு அதிகமான நிதியொதுக்கீடு,


05:08 PM

வன விலங்குகள் குறித்து கவனம் செலுத்தப்படும்.


05:07 PM

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை, 20,000 வீடுகளைக் கொண்ட தொகுதி, 2020இல் நிர்மாணிக்கப்படும்.


05:06 PM

பாடசாலை மாணவர்களுக்கு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார காப்புறுதித்திட்டம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.


05:05 PM

லயன் திட்டங்களை ஒழித்து 25,000 வீடுகளை அமைக்கும்  மத்தியத்திட்டத்துக்கு 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு,


05:04 PM

வடக்கில் இடம்பெயர்தோருக்காக ஆரம்பிக்கபட்டுள்ள வீடமைப்புத்திட்டத்துக்கு, 3000 மில்லியன் ஒதுக்கீடு


05:03 PM

மதுபானத்தின் மீது, தேசியத்தைக் கட்டியெழுப்பும் வரி 2018 ஏப்ரல் 1ஆம் முதல் அறவிப்படும்.


05:02 PM

எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் ​நோய் அறிகுறிகளை, ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிப்பதற்கு, 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடு,


05:01 PM

குளிர்பானங்களில் சேர்க்கப்படும் ஒரு சதவீத சீனியின் அளவுக்கு 50 சதம். வரி.இன்று இரவிலிருந்து அமுலில்.


04:58 PM

சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்ய 200 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.


04:57 PM

விளையாட்டு காலணிகளில் இறக்குமதி வரி நீக்கப்படும்.


04:56 PM

மஹாபொல புலமைப்பரிசிலுக்கு, வருடாந்தம் ஒதுக்கப்பட்ட 300,000 ரூபாய் 500,000ரூபாயாக அதிகரிக்கப்படுவதோடு, 3,000 கூடுதல் மாணவர்கள் புலமைப்பரில்களைப் பெற்றுக்கொள்வர்,


04:55 PM

கிராமிய மட்டத்தில் 100 விளையாட்டு மைதானங்களை அபிவித்தி செய்ய 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


04:53 PM

சுதேச மருத்துவத்துக்கான ஒரு பட்டப்படிப்பு நிறுவனம் நிறுவப்படும்.


04:52 PM

வயம்ப, சப்ரகமுவ மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியை அபிவிருத்தி செய்வதற்க, 1.25 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


04:51 PM

ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை அதிகரிக்க ரூ 750 மில்லியன் ஒதுக்கீடு.


04:51 PM

மரபியல், ரோபோட்டிக்ஸ் மற்றும் நனோ தொழில்நுட்பங்கள், பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்படும்.


04:50 PM

யாழ். வளாகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்துக்கு, புதிய நூலகம்


04:49 PM

விலைமதிப்பற்ற கற்களை வெட்டுதல், மெருகேற்றி ஏற்றுமதி செய்வதற்கு இலங்கைக்கு கொண்டுவரப்படும் போது, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி விதிக்கப்பட மாட்டாது.

 


04:46 PM

தேசிய கல்வி நிறுவனங்கள் மறுசீரமைப்பு.


04:43 PM

ஜேர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்தின் உதவியுடன், புதிய ஐந்து தொழிற்பயிற்சி நிலையங்கள் நிர்மாணிக்கப்படும்.


04:43 PM

கழிவு முகாமைத்துவத்தை நிர்வகிக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உடனடியாக அமைக்கப்படும்.


04:41 PM

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்விகளில் முதலீடுகள்.


04:38 PM

பிட்டிபனையில், உயர் தொழில்நுட்ப பூங்கா.


04:36 PM

முச்சக்கரவண்டி அதிகாரசபை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அது, போக்குவரத்து அமைச்சின் கீழ்​ கொண்டுவரப்படும்.


04:35 PM

வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வைத்திருப்போரிடமிருந்து, அனைத்து விமானநிலைங்கள் மற்றும் துறைமுகங்களில், அறவிடப்படும் வரியை மீள்பெறும் திட்டம் 2018 மே மாதம் 1ஆம் திகதி முதல், செயற்படுத்தப்படும்.

 


04:33 PM

ஐந்து வருடங்களுக்கு குறைந்த வாகனங்களுக்கு புதிய காபன் வரி


04:32 PM

வாகன நெரிசலற்ற வீதிகளில் ஓடும் இலத்திரனியல் வாகனங்களுக்கு வரிக் குறைப்பு.


04:31 PM

மதுர ஓயா மற்றும் கல் ஓயா ஆகிய பூங்காக்களை உயர் ரக சவாரி இடங்களாக மாற்றுவதற்க, 75 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.


04:29 PM

கோட்டை, நானு-ஓயா மற்றும் எல்ல ஆகிய புகையிரத நிலையங்கள், தொல்பொருள் இடங்களாக பிரகடனம்.


04:28 PM

சுற்றுலாத் துறைக்கு தேவையான சில குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்கள் மீது சுமத்தப்படும் கட்டணத் தீர்வுகள் அகற்றப்படும்


04:27 PM

அனைத்து சுற்றுலாத்துறை சேவை வழங்குநர்களையும் இலங்கை சுற்றுலாத்துறை சபையின் கீழ் பதிவு செய்யுமாறு வலியுறுத்தல்,


04:26 PM

2025ஆம் ஆண்டளவில், சுற்றுலாத்துறையின் வளர்ச்சி 3 மடங்களால் அதிகரிக்கும்.


04:26 PM

சிலாபம், மிரிஸ்ஸ, காரைநகர், பூரனாவெல்ல மீன்பிடித்துறைமுகங்களை புனரமைப்பதற்கு, 1750 மில்லியன் ரூபாய்.


04:25 PM

அன்னாசி, வாழைப்பழத்தின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, கன்றுகளை உற்பத்தி செய்வதற்கு, விசேட ஆராய்ச்சி நிலையம்.


04:22 PM

சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.


04:21 PM

மசாலா பொருட்களின் தரநிலைகளை உறுதிப்படுத்துவதற்கு, கடுமையான சட்டங்கள் செயற்படுத்தப்படும்.


04:18 PM

தரநிலை நிறுவனங்களை அபிவிருத்தி செய்தல்.


04:14 PM

ஏற்றுமதி சந்தை அணுகல் திட்டத்துக்கு, 800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


04:11 PM

காலநிலை அவதான நிலையத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தரவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளப்படும்


04:11 PM

தகவல் தொழில்நுட்பத்துறை அபிவிருத்திக்கு, 3000 மில்லியன் ரூபாய்.


04:09 PM

விசேட தேவையுடைய நபர்களால் முன்னெடுக்கப்படும்  வர்த்தக நடவடிக்கைகளுக்காக வரி நிவாரணம்.


04:08 PM

இன்னும் ஐந்து வருடங்களில், இலங்கையில் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை நிர்மாணிப்பதற்கு 3 பில்லியன் ஒதுக்கீடு.


04:07 PM

சுயதொழில் புரிவோருக்கான கடன் திட்டத்துக்கு, 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


04:06 PM

சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு 10 சதவீத நிவாரணம்


04:05 PM

இறக்குமதி, ஏற்றுமதி அபிவிருத்தி வங்கி நிர்மாணிப்பதற்கு 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


04:04 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்மாதிரியான, நீர்வாழ் உயிரியல் பூங்காவுக்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.


04:00 PM

பயிர் காப்பீட்டுத்திட்டத்துக்கு, 3 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


03:59 PM

ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக, 55 அடி நீளமான இழுவைப்படகுகளின் செலவு வீதத்தில், 50 சதவீதமானததை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.


03:57 PM

கடலட்டை வளர்ப்புக்காக, கிளிநொச்சி பூநகரியில் விசேட திட்டம் முன்னெடுக்கப்படும்.


03:56 PM

கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில், விவசாயத்தை  மேம்படுத்துவதற்காக, களஞ்சியசாலைகள் நிர்மாணிக்கப்படும்.


03:55 PM

வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில், மழை நீர் சேமிப்புக்காக, மத்திய மற்றும் நடுத்தர குளங்களைப் புனரமைப்பதற்கு, 1,000 மில்லியன் ரூபாய்


03:54 PM

சிறிய மற்றும் நடுத்தர குளங்களை புனரமைப்பதற்கு, 1000 மில்லியன் ரூபாய்.


03:50 PM

கல்கிசையிலிருந்து இரத்மலானை வரையிலான கரையோர பாதுகாப்புத் திட்டத்துக்கு, 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


03:50 PM

10 களப்புகளை புனரமைப்பதற்கு நிதியொதுக்கீடு


03:47 PM

பின்னவளை மிருககாட்சிசாலை புனரமைக்கப்படும்.


03:46 PM

தெஹிவளை மிருககாட்சி சாலை மற்றும் மற்றயை மிருக காட்சிசாலை அனைத்தும், திறந்தவௌியா மாற்றப்படும்.


03:46 PM

இலங்கையின் ஒவ்வொரு நிர்வாகப் பகுதிகளிலும், பசுமை இலங்கை திட்டத்துக்குக் கீழ், ஓடு பாதைகள், நூலகம், தியான மையங்கள் போன்றவை அமைக்கப்படும்.


03:43 PM

வௌ்ளைத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, தற்காலிக தீர்வாக பாதுகாப்பு கட்டடங்கள் நிர்மாணிக்கப்படும்.


03:41 PM

தற்போது பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டிகளை, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.


03:41 PM

நாடளாவிய ரீதியில், மின்சார சார்ஜ்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.


03:40 PM

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான வரி விதிக்கப்படும்


03:40 PM

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 50 இலத்திரனியல் பஸ்களை கொள்வனவு செய்வதற்கு, 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.


03:40 PM

காற்றுப்பைகள் இல்லாத வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படும்.


03:39 PM

தற்போதுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு, அவர்களுடைய முச்சக்கரவண்டிகளை, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு காலஅவகாசம் வழங்கப்படும.


03:38 PM

2,500 சிசி திறனுக்கும் அதிகமான சொகுசு வாகனங்களுக்கு சொகுசு வரிகள் அறவிடப்படும்.


03:38 PM

இலங்கை போக்குவரத்து சபைக்கு, 50 மின்சார பஸ்களை கொள்வனவு செய்ய 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


03:37 PM

மின்னியல் முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்வதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு, டீசல் முச்சக்கரவண்டிகளுக்கான இறக்குமுதி வரிகள், 50,000 ரூபாயால் அதிகரிக்கப்படும்.


03:37 PM

ஆடம்பர கார்கள் மீது ஒரு சிறப்பு வரி விதிக்கப்படும்.


03:36 PM

இயந்திரத் திறனைப்பொருத்து, வாகன இறக்குமதிகளுக்கான வரிகள், மீள்திருத்தம் செய்யப்படும்.


03:36 PM

மின்சார கார்களின் இறக்குமதி வரி குறைந்தபட்சம்,  ஒரு மில்லியன் ரூபாய் குறைக்கப்படும்


03:35 PM

இலத்திரனியல் முச்சக்கரவண்டிகள், பஸ்கள் மற்றும் மற்றைய வாகனங்களுக்கு, இறக்குமதி வரிகள் தளர்த்தப்படும்.


03:34 PM

2040ஆம் ஆண்டளவில், பெற்றோலியம் அல்லாத சக்திகளில் இயங்கும் வாகனங்களாக மாற்றப்படும்.


03:33 PM

2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில், அரசாங்கம், கடல்வளங்களைப் பயன்படுத்தும்.


03:32 PM

கடைகள் மற்றும் அலுவலகங்கள் சட்டங்கள்  திருத்தப்பட வேண்டும்.


03:30 PM

2018 ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டம் ‘எண்டர்பிரைஸ் பட்ஜெட்’ என்று நிதியமைச்சர் பெயரிட்டுள்ளார்.


03:29 PM

2018ஆம் ஆண்டுக்கான பணவீக்கம், 6 சதவீதத்துக்கும் கீழ்ப்பட்டதாகவே ​பேணப்படும்.


03:29 PM

2018ஆம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தால் அதிக்கப்படும்.


03:28 PM

2018ஆம் ஆண்டு பாதீட்டை, தொழிற்றுறையை ஊக்குவிக்கும் வரவு-செலவுத்திட்டம் என்று, பெயரிட்டார்.


03:27 PM

2025 ஆம் ஆண்டில், ஒரு மத்திய வருமானம் கொண்ட நாடாகவேண்டும். அதற்காக, விரைவான வருமானத்தை கைப்பற்றவேண்டும்.


03:24 PM

2017 ஆம் ஆண்டில், இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட சேதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாகும்.


03:23 PM

அரசாங்க வருமானம், 41 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. அரச வருமானம் பற்றிய நிறைய சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன


03:22 PM

வரவு- செலவுத் திட்ட பற்றாக்குறையானது, 202 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் குறைவடையும் என எதிர்பார்க்கின்றோம்.


03:19 PM

அரசாங்கம் என்ற ரீதியில், பொருளாதரத்தில் தீர்க்கமான மாற்றங்களைக்கொண்டுவருவதற்கு எம்மால் முடிந்தது.


03:17 PM

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார்.


03:17 PM

வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு வந்துகொண்டிருந்த நிதியமைச்சர் மங்கள சமரவீரவுடன் சக உறுப்பினர்கள் செல்பி எடுத்துகொண்டனர்.


03:15 PM

யுத்தத்துக்கு பின்னர்,தமிழர்களின் மனதை வென்றெடுத்து, பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம். எனினும், அந்த ஆட்சியாளர் தங்களுடைய குடும்பத்தை கட்சியெழுப்புவ​தில் கரிசை கொண்டிருந்தார். என்று கூறிய அமைச்சர் மங்கள சமரவீர, இவ்வளவுதான் வரலாறு என்றார்.


03:13 PM

2018 ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டம், நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு-செலவுத்திட்டமாகும்


03:12 PM

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 72 ஆவது, வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுகொண்டிருக்கின்றது.


03:10 PM

​தேசிய வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதில் பெருமையடைகின்றேன்: அமைச்சர் மங்கள


03:06 PM

நிதியமைச்சர் மங்கள சமரவீர, அவைக்குள் பிரவேசித்தார்  ஆளும் தரப்பினர் மேசைகளில் தட்டி வரவேற்றனர்.


03:03 PM

நிதியமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.


03:02 PM

சபாநாயகர் கரு ஜயசூரிய சபையை வந்தடைந்தார்


03:01 PM

நாடாளுமன்ற உறுப்பினர்களை அவைக்குள் அழைக்கும் ‘கோரம்’ ஒலித்துகொண்டிக்கிறது.


02:59 PM

2018 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. இதனையடுத்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஆளும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வருந்துகொண்டிருக்கின்றனர்.


02:56 PM

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் சைக்கிளிலேயே நாடாளுமன்றத்துக்கு வந்தார்.


02:41 PM

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும்,  நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வருகைதந்து கொண்டிருக்கின்றனர்.


02:38 PM

2018  ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com