பாதிக்கப்பட்டவர்களின் நியாயத்தை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் – சுரேஸ் பிறேமச்சந்திரன்

(27.07.2015) இந்தியிவிற்கு இலங்கை இரண்டுபடக்கூடாது என்றதொரு நிலவரம் இருக்குமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் குறைந்தபட்சம் தமிழ் மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை இந்தியா எற்றுக்கொள்ளாது விட்டால் இந்த நாட்டில் ஒரு பிரச்சினை தொடர்ந்து இருக்கவே செய்யும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற தேர்தல் யாழ் மாவட்ட வேட்பாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (27.07.2015) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
இங்கு பிரச்சினை தொடர்ந்து இருப்பதென்பது இந்தியாவினுடைய பாதுகாப்பிற்கு நல்லதா இல்லையா என்பதை இந்தியா தீர்மானிக்கும். எனவே இந்தப்பிரச்சினையை தமிழ் மக்கள் எற்றுக்கொள்ளக்கூடியவகையில் தீர்க்கவேண்டிய பொறுப்பும் கடமையும் இந்தியாவிற்கு உண்டு. இந்தியா பாதிக்கப்பட்டவர்களின் நியாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் .

 ஒன்றுபட்ட இலங்கைக்குள்இந்தப் பிரச்சினைய தீர்பதற்கான முறையை நாங்கள் தெளிவாக சொல்லியிருக்கிறோம் அதனை ஏற்கவேண்டியது இந்தியாவினுடைய கடமை .

13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்க முடியாது என்பதை இந்தியாவிற்கு நாங்கள் பல நுறு தடவை கூறிவிட்டோம். இந்திய அரசாங்கம் அல்லது இந்திய வெளியுறவுத்துறை எவ்வாறான கருத்துக்களைக் கொண்டுள்ளது என்பது வேறு ஆனால் நாங்கள் 13 ஆவதுதிருந்தம் எங்கள் பிரச்சினையைத் தீர்க்காது என்பதை மிகத் தெளிவாககூறியிருக்கின்றோம்.  மக்களின் ஆணையுடன் இதனை மீண்டும் அவர்களிற்கு தெளிவாகக் கூறுவோம் எற்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds