பாண் விலை 4 ரூபாவால் அதிகரிப்பு

பாண் விலையை நேற்று நள்ளிரவு முதல் 4 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
பிரிமா நிறுவனம் கடந்த வாரம் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 7 .20 சதத்தினால் அதிகரித்ததையடுத்து பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
கடந்த வருட இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினூடாக கோதுமை மாவிலைகள் 12.50 ரூபாவினால் குறைக்கப்பட்டன. இதனையடுத்து பாண் விலைகள் 6 ரூபாவினால் குறைக்கப்பட்டதோடு கோதுமை மா உற்பத்திகளின் விலைகள் குறிப்பிடும் படியாக குறைக்கப்படவில்லை.
எரிபொருள் விலைகள் மற்றும் பேக்கரி உற்பத்தி செலவுகள் அண்மைக்காலத்தில் குறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோதுமை மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து கோதுமை மா விலை 7.20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
பாண் விலை அதிகரிப்பு தொடர்பில் வர்த்தக வாணிப அமைச்சு தலையீடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
 இந்த முடிவை எதிர்த்துள்ள அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதற்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com