பாடசாலை அடிக்கல் நாட்டு நிகழ்வுக்கு அழைக்கவில்லை : மத்திய மாகாணத் தமிழ் உறுப்பினர்கள் மூவர் வெளிநடப்பு

untitled-1மத்திய மாகாண கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களின் போது மாகாணசபை உறுப்பினர்கள் பலருக்கு அழைப்பு விடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாணசபையின் தமிழ் உறுப்பினர்கள் மூவர் 20.09.2016 அன்று சபை நடவடிக்கைகளை வெளிநடப்புச் செய்தனர்.

மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் , முத்தையா ராமசாமி , ஆர். இராஜாராம் ஆகிய மூவருமே இவ்வாறு வெளிநடப்புச் செய்தனர்.

மத்திய மாகாண கல்வியமைச்சரான முதலமைச்சரின் பணிப்புரைகளையும் மீறி மத்திய மாகாண அமைச்சர் ஒருவர் செயற்படுவதாகவும் இவருக்கு உடந்தையாக கல்வி அதிகாரிகள் சிலர் செயற்படுவதாகவும் இந்த மாகாணசபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய மாகாண கல்வியமைச்சின் நிதியொதுக்கீட்டில் பாடசாலை கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுகின்ற அடிக்கல் நாட்டு நிகழ்வுகளிலும் கட்டிட திறப்பு விழா நிகழ்வுகளிலும் சகல தமிழ் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்று மத்திய மாகாண முதலமைச்சர் ஏற்கனவே கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்.

எனினும் சில கல்வி அதிகாரிகள் இதனை மீறியுள்ளனர். அட்டன் கல்வி வலயத்தில் 19.09.2016 அன்று நான்கு பாடசாலைகளுக்கு அடிக்கல் நாட்டு நிகழ்வுகள் இடம் பெற்ற போது அந்த நிகழ்வுகளில் அமைச்சர் ஒருவரும் அவரின் கட்சியைச் சேர்ந்த இரண்டு மாகாணசபை உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்த அட்டன் கல்வி வலயப்பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகள் குறித்து மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் , முத்தையா ராமசாமி மற்றும் ஆர்.இராஜாராம் ஆகியோர் தமது அதிருப்தியை சபையில் வெளிப்படுத்திய பின்பு சபை நடவடிக்கைகளை வெளிநடப்பு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com