பாடசாலைகளில் பிங்கர் பிறிண்ட் வேண்டாம் – யாழில் அடம்பிடிக்கும் பிரபல ஆசிரியர்கள் !!

கல்வியில் வடக்கு மாகாணம் 9 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ள நிலையில் அதனைச் சீர்செய்து மாணவர்களை மீட்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளிற்கு சில தரப்புக்கள் ஒத்துழைப்பு வழங்காது விசமத்தனமான பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்களது நேரத்திற்கான வரவை உறுதிப்படுத்த பொருத்தப்பட்டுள்ள கையடையாள இயந்திர நடைமுறைக்கு எதிராக தனியார் கல்விநிலைய வருவாயில் ருசிகண்ட பிரபல ஆசிரியர்கள் பலர் எதிர்ப்பு வெளியிட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர்கள் பாடசாலை ஆரம்பிக்க முன் பிரத்தியோக வகுப்புக்கள், பாடசாலையின் இடைவேளையில் பிரத்தியோக வகுப்புக்கள் பாடசாலை முடிவடையமுன் திருட்டு ஒப்பம் இட்டுவிட்டு பாடசாலையிலிருந்து வெளியேறி பிரத்தியோக வகுப்புக்களை நடத்திவருகின்றமை யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் கையடையாள இயந்திர முறையை நிறுத்தக் கோரி அவர்களினால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
குறித்த துண்டுப்பிரத்தில் மீள முடியாத பாதையில் வடக்கு மாகாணம், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எங்கள் கைகளில், ஆசிரியர்களே ஒன்றுபடுங்கள், வடக்கு மாகாணம் கல்வியில் 9 வது இடத்தில் இருப்பதற்கு யார் காரணம் கையடையாள இயந்திரத்தினால் ஆசிரியர்களுக்கு தேவையற்ற லீவு, மன உளைச்சல் ஏற்படுகின்றதெனவும் குறித்த அனாமதேய துண்டுபிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளிற்கு ஆசிரியர்கள் நேரகாலத்துடன் வருகை தருவது தொடர்பில் குறித்த கையடையாள இயந்திரம் பெரு வெற்றியை தந்துள்ளது.அதிலும் குறித்த கையடையாள இயந்திரம் வன்னி பகுதியில் வெற்றியை தந்துள்ளதுடன் ஆசிரியர்கள்; பாடசாலைக்கு நேரத்துடன் வருகை தருவதை உறுதிப்படுத்த உதவி வருகின்றது.

இந்நிலையில் இதுவரை காலமும் பலாபலன்களை அனுபவித்த சிறுகும்பல் ஒன்று இத்தகைய பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com