பாக். பிரதமருக்கு அதி உச்ச வரவேற்பு – கடுஞ்சினத்தில் இந்தியா

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமருக்கு அளிக்கப்பட்ட உச்சக்கட்ட வரவேற்பு மற்றும் பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்  இந்திய அரசுக்கு கடுஞ்சினத்தினை ஏற்படுத்தியிருப்பதாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னைய மகிந்த ராஜபக்ஸ அரசு இந்தியயாவோடு நல்லுறைவைப் பேணினாலும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனேயே நெருங்கிய உறவுநிலையைக் கொண்டிருந்தது. அச் சீற்றங்களின் வெளிப்பாடுதான் மகிந்த அரசை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றும் நடவடிக்கைக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து மைத்திரி அரசை நிறுவ திரைமறைவில் செயற்பட்டது.

இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன அரசும் பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவுகளைப் பேணுவதும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளுவதுமான நடவடிக்கை இந்திய அரசை சற்று தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருப்பதாக தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com