பாக். பல்கலையில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்: 20 மாணவர்கள் பலி (வீடியோ)

பாகிஸ்தானில் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள், 20 மாணவர்களை சுட்டுக் கொன்றனர்.  50 பேர் காயமடைந்து உள்ளனர்.
 
பாகிஸ்தானின் சர்சட்டா பகுதியில் அமைந்துள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்திற்குள் இன்று காலை தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் புகுந்தனர். அப்போது, கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 மாணவர்கள் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். தகவல் அறிந்து ராணுவத்தினரும், பாதுகாப்பு படையினரும் அந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அப்போது, நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தற்போது பள்ளி வளாகத்திற்குள் 8ல் இருந்து 10 தீவிரவாதிகள் வரை இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. 

முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தினுள் 4 வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு, பெஷாவரில் பள்ளி ஒன்றில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 140க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds