பாக்தாத் தாக்குதலில் 14 பேர் பலி: ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு

160724124533_iraq_512x288__nocreditஇராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில், குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 20க்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர் என பாக்தாத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஷியா முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் கதிமியா மாவட்டத்தின் நுழைவாயிலில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் குண்டுதாரி அவனது குண்டுகளை வெடிக்கச் செய்தான்.
தற்போது பாதுகாப்பு படைகள் அந்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர் மேலும் பாக்தாத்தில் உள்ள மற்ற சோதனைச் சாவடிகளில், சோதனை நடைமுறைகளை பலப்படுத்தியுள்ளனர்.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு, தங்கள் அமைப்பைச் சார்ந்த ஒருவர்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com