பாகுபலி 2 தொலைக்காட்சி உரிமையை வாங்கியது விஜய் டிவி?

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் – பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, ´பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது.

இந்த நிலையில் பாகுபலி 2 (தமிழ்) படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனிமேல் கும்கி போல அடிக்கடி பாகுபலி 2-யும் விஜய் டிவியில் பார்க்க நேருமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com