பாகிஸ்தான் மருத்துவமனையில் கொடூரத் தாக்குதல் – 70 இற்கு அதிகமானோர் பலி 120 பேர்வரை படுகாயம்

_90708415_mediaitem90708414
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்த மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 18 பேர் வழக்கறிஞர்கள் எனவும் இருவர் ஊடகவியலாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இக் குண்டுத்தாக்குதலில் 120 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் ஆச் தெலைக்காட்சியின் (Aaj TV) ஷகீட் கான்  (Shahzad Khan)  மற்றும் டவான் செய்தியின் (DawnNews)  மஹ்மூத் கான்  (Mehmood Khan) என அடையாளங்காணப்பட்டுள்ளனர்.aaj-news-cameraman

57a8b73f70ef2
இந்த தாக்குதல் நடைபெறுவதற்குமுன், பலுச்சிஸ்தான் மாகாண வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். பலுச்சிஸ்தான் தலைநகரில் இருந்த மருத்துவமனையில் அவருக்கு அஞ்சலி செலுத்த கூட்டம் கூடியிருந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

_90708422_mediaitem90708421

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் செவ்வாய் அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
பலுச்சிஸ்தானில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் படுதோல்வியை தழுவி இருப்பதாக பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் சங்கம் சாடியுள்ளது.

பல ஆண்டுகளாக நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களில் பல நூறு உயிரிழப்புகளை குவெட்டா கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.160808120503_pakistan_hospital_2_640x360_ap_nocredit

_90172386_pakistanquetta464

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds