பாகிஸ்தான் குண்டுத்தாக்குதல் – 2 ஊடகவியலாளர்கள் பலி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்த மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த தற்கொலை குண்டு தாக்குதலில்  இரு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நடைபெறுவதற்குமுன், பலுச்சிஸ்தான் மாகாண வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். பலுச்சிஸ்தான் தலைநகரில் இருந்த மருத்துவமனையில் அவருக்கு அஞ்சலி செலுத்த கூட்டம் கூடியிருந்தது  அங்கு சட்டத்தரணிகளும் ஊடகவியலாளர்களும் திரண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்போதே இத் தாக்குதல் நடந்துள்ளது.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் ஆச் தெலைக்காட்சியின் (Aaj TV) ஷகீட் கான்  (Shahzad Khan)  மற்றும் டவான் செய்தியின் (DawnNews)  மஹ்மூத் கான்  (Mehmood Khan) என அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

aaj-news-cameraman

57a8b73f70ef2

இத்தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 18 பேர் வழக்கறிஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com