சற்று முன்
Home / செய்திகள் / பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் நெடுந்தீவுக்குச் சென்ற இரகசியம் என்ன ?

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் நெடுந்தீவுக்குச் சென்ற இரகசியம் என்ன ?

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் தீவுகளில் ஒன்றான நெடுந்தீவு பகுதிக்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேயர் ஜெனரல் முகமட் சாட் கஹடாக் நேற்றய தினம் சென்றுள்ளதாக அறியக்கிடைத்தது.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நெடுந்தீவு பகுதிக்கு தனது குடும்பத்துடன் விஜயம் மேற்கொண்ட உயர்ஸ்தானிகர் குறித்த பகுதிகளை பார்வையிட்டு உள்ளார்.

ஏற்கெனவே மண்டைதீவு பகுதியில் பாகிஸ்தான் சர்வதேச தரத்திலான ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

இந்நிலையில் உயர்ஸ்தானிகர் இரகசியமான முறையில் நெடுந்தீவுக்கு விஜயம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com