பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் வட்டகொடை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை பகுதியிலிருந்து பூண்டுலோயா பகுதியை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் புஸ்ஸல்லாவ பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று (01) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதன் காரணமாக மோட்டர் சைக்கிளின் சாரதி மோட்டர் சைக்களின் கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் வீதியில் இழுத்துச் சென்று எதிரே வந்த பேரூந்தில் மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த புத்திக சமிந்த வடுவேகெதர (வயது – 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com