பஸ் கோர விபத்து – 22 பேர் படுகாயம் – 5 பேர் ஆபத்தான நிலையில்…

பண்டாரவளையிலிருந்து மரங்காவெல கொஸ்கம பகுதியை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று கொழும்பு பதுளை பிரதான வீதியில் அப்புத்தளை உடு விகாரகல எனும் பகுதியில் வீதியை விட்டு விபத்துக்குள்ளானத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பஸ்ஸில் பயணித்த 22 பேர் படுங்காயம்பட்டு வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று (01) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் அப்புத்தளை, தியத்தலாவ, பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் அப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com