பசில் ராஜபக்ஷ விளக்கமறியலில் (இரண்டாம் இணைப்பு)

basil

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க கடுவலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று காலை பாரிய நிதி மோசடிகளை ஆராயும் சிறப்பு போலிஸ் குழுவினரால் பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.
கடத்த ஆட்சிக் காலத்தில் திவிநகும திணைகளத்தின் நிதியை மோசடி செய்ததாக பசில் ராஜபக்ஷ மீது போலிசார் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.
விசாரணைகள் முழுமை பெறாத காரணத்தினால் பசில் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்கும்படி போலீசார் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.
அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பசில் ராஜபக்ஷவை எதிர் வரும் 1-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரான பசில் ராஜபக்ஷ போலிசாரால் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காகச் சென்ற, பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds