பளை தர்மங்கேணி பகுதியில் கோர விபத்து ஐந்து பேர் பலி

palai-accident-4-dead-4கிளிநொச்சி பளை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 15-09-2016 இடம்பெற்ற வாகன விபத்தில் ஜவா் பலியாகியுள்ளதுடன் ஆறுபோ் காயமடைந்துள்ளனா்.

பளை புதுக்காட்டுச் சந்திக்கும் தர்மக்கேணி பிரதேசத்திற்கும் இடையில் ஏ9 வீதியில் இத்துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வுவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்தும், வவுனியாவில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்றும் நேருக்கு நோ் மோதியுள்ளது

வவுனியாவில் இடம்பெற்ற மரண வீடொன்றில் பங்கேற்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்கள்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே பலியானதுடன், காயமடைந்த நிலையில் பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேரில் ஒருவா் மேலதிக சிகிசைக்காக யாழ் போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் ஏனையவா்கள் பளை மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

பேரூந்தின் சாரதியை கைது செய்துள்ள பளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மத்துக்கம நோக்கிப் புறப்பட்ட தனியார் பேருந்தும் கொழும்பில் இருந்து வந்த ஹயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஹயஸ் வாகனத்தில் வந்த 06 பேர் பலியானதாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் வானில் பயணித்த நால்வரே உயிரிழந்துள்ளனர். நெல்லியடி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எஸ்.பசுபதி (வயது – 78) ப.பொன்னம்மா (வயது – 75) ப.நந்தமூர்த்தி (வயது – 43) ஆகியோரும் அவர்களின் உறவுப்பெண்ணான 55 வயது மதிக்கத்தக்க ஒருவருமே விபத்தில் உயிரிழந்தவர்களாவர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds