பளைப் பிரதேசத்தில் இலங்கை இந்திய நட்புறவு மைய வாளகம் நிறுவ ஏற்பாடு

தமிழகம் நாகை மாவட்ட மக்கள் மன்றமும் யாழ்ப்பாணம் ஆதீனம் என்ற அமைப்பும் இணந்து யாழ்ப்பாணத்தில் இந்திய- இலங்கை நட்புறவு மையம் ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி- பளை பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணியில் அமைய உள்ளதாகக் கூறப்படும் இந்திய- இலங்கை நட்புறவு மைய வளாகம் சுமார் 300 கோடி(இந்திய ரூபாய்) செலவில் அமைக்கப்படவுள்ளதாக அமைப்பின் நடவடிக்கை பணிப்பாளர் பி.ஜெயரத்தினம் கூறியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதற்காக நாகை மாவட்ட மக்கள் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தமிழகம் முழுவதும் 500 உண்டியல்கள் வைக்கப்பட்டு நிதி சேகரிக்கப்படுகின்றது. மேலும் நாகை மாவட்ட மக்களால் வழங்கப்பட்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட வள்ளி தெய்வானை சமேத முருகபெருமானின் சிலை தமிழகம் எங்கும் பவனி கொண்டு செல்லப்பட்டு நிதி சேகரிக்கப்படுவதுடன் இறுதியாக அவ்விக்கிரகங்கள் இலங்கையில் பிரதிஸ்டை செய்யப்படும். இதன்படி இலங்கையில் அமையவுள்ள நட்புறவு மையத்தில் இந்திய மக்களால் நிறுவப்படும் சர்வதேச இந்து ஆலயம் ஒன்று நிறுவப்படுவதுடன் இந்திய மற்றும் புலம்பெயர் மக்கள் தங்குவதற்கான 60 வீடுகள் இந்த நட்புறவு மையத்தினுள் அமைக்கப்படும் என்றார்.

நூலகம், அன்னதான மண்டபம், யோகாசன பயிற்சி கூடம், கலையரங்கம், மருத்துவ முகாம், நீராடல் தடாகம் போன்றன அமையவுள்ளதுடன் இந்த இந்திய- இலங்கை நட்புறவு மையத்தின் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள், சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு, கடற்றொழிலாளர்களுக்கான உதவிகள் போன்றனவும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com