பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் யாழில் கைது

யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்த நிலையில் நீண்ட நாளட்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மூவரை யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக இப் இரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிறிகஜன் தெரிவித்துள்ளார்.

இதன்படி யாழ்ப்பாணம் ஜந்து சந்தி மற்றும் குருநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களையே குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் கடந்த காலங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதுடன் இதுவரை சுமார் 80 இலட்சத்திற்கும் மேலதிகமான நகை மற்றும் பணங்களை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இவர்கள் வழிப்பறிக் கொள்ளைகளிலும் மோசடிக் கொள்ளை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்ததாகவும், சிறுவர்களை வீடுகளுக்குள் இறக்கி அவர்களை பயன்படுத்தி பணம் நகை பொருட்களை கொள்ளையிட்டும் செயல்களிலும் ஈடுபடுவதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மூவரிடமும் தொடர்ச்சியான விசாரனைகள் இடம்பெற்று வருவதாகவும், அவ் விசாரனைகளை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com