சற்று முன்
Home / செய்திகள் / பல்டியத்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் – தயாசிறி ஜயசேகர.

பல்டியத்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் – தயாசிறி ஜயசேகர.

பொதுஜன பெரமுனவுடான பேச்சுக்கள் தோல்வியடைந்தால், அடுத்த மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சுதந்திரக்கட்சி அறிவித்தது. அந்த அறிவிப்பிற்கு அர்த்தம், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக்கட்சி போட்டியிடும் என்பதல்ல.

இப்படி ஒரேயடியாக பல்டியத்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர.

நேற்று கோட்டாபயவுடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார்.

புதிய அரசியல் கூட்டணியை அமைப்பதற்கான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பெரமுனவின் எட்டாவது கூட்டம் நேற்று பிற்பகல் கொழும்பு 07, மார்கஸ் பெர்னாண்டோ மவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

முதலாவதாக, சுதந்திரக் கட்சி மற்றும் பெரமுனவிற்கு இடையே கலந்துரையாடல் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் சுதந்திரக்கட்சி பொதுச் செயலாளர் தயசிறி ஜெயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் (யுபிஎஃப்ஏ) செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண ஆகியோர் கலந்து கொண்டனர். பெரமுன தரப்பில் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்,ஷ டலஸ் அழகபெருமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர், சுதந்திரக்கட்சிக்கும், கோட்டாபயவிற்குமிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கலந்துரையாடலுக்குப் பின்னர், சுதந்திரக் கட்சி உடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து விட்டதாகவும், அவர்களும் தமக்கு ஆதரவளிப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெரமுனவுடனான பேச்சுவார்த்தை முன்னேறி வருவதாக மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

“எங்கள் கட்சியின் அடையாளத்தை பாதுகாக்கும் அதே வேளையில் பெரமுனவுடன் சேர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று அவர் கூறினார்.

நாட்டில் ஆளுகை மற்றும் தூய்மையான ஆளுகை கொள்கைகள் குறித்து கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஆலோசனை நடத்தியதாக கூறினார்.

“இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதால், ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு வேட்பாளரை நிறுத்தப்போவதாக தேர்தல் ஆணையத்திற்கு சுதந்திரக்கட்சி தெரிவித்ததாக அவர் கூறினார். இருப்பினும், நாங்கள் ஒரு வேட்பாளரை நிறுத்துகிறோம் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை.

இரு கட்சிகளும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நன்கு அறிந்திருக்கிறோம்“ என சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

“இரு கட்சிகளும் ஒன்றிணைவதற்கு தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஐ.தே.கவை தோற்கடிப்பதை நோக்கமாக கொள்ள வேண்டும். கடந்தமுறையை போல ஐ.தே.கவை நாடுவதை சு.க நிறுத்த வேண்டும்“ என டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com