பல்கலை மாணவர் போராட்டம் – செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களிற்கு இடையூறு

_92160281_jaffna03துப்பாக்கிச் சூட்டின்மூலம் கொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதிகோரி தொடர்ச்சியாக வகுப்புக்களைப் பகிஸ்கரித்துவரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திங்கட்கிழமை (31) பல்கலைக்கழக நிர்வாக முடக்கப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

பல்கலைகழக நிர்வாகம்சார்ந்து எவரையும் பல்கலைக்கழக வாளாகத்திற்குள் அனுமதிக்காது  மாணவர்கள் போரைாட்டத்தை முன்னெடுத்துவந்த நிலையில் மாணவர்களுடனான பேச்சுவார்த்தைக்காக அமைச்சர் சுவாமிநாதன் உள்ளிட்ட குழுவினர் பல்கலைக்கழகம் வந்தபோது குறித்த சம்பவங்களை செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் பல்கலைக்கழக வளகத்திற்குள் நுளைய முற்பட்டபோது மாணவர்களால் அவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். அதன்போது அங்கு குழுமியிருந்த மாணவர்கள் சிலர் எங்களிற்கு ஊடகவியலாளர்கள் தேவையில்லை என கோசங்கள் எழுப்பியதையும் காண முடிந்தது.

சுமார் ஐந்து நிமிடம் வரை இந்த இழுபறி நிலை நீடித்த நிலையில் சில ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். பின்னர் ஊடகவியலாளர்களிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

யாரையும் உள்ளே அனுமதிக்கவேண்டாம் என மாணவர் ஒன்றிய பிரதிதிகள்  கூறிவிட்டு அமைச்சருடனான கலந்துரையாடலுக்குச் சென்றதால்தான் ஊடகவியலாளர்களையும் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாடலில் ஏற்பட்ட தவறு என்று பின்னர் மாணவர்கள் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எனினும் பல்கலைகழக துணைவேந்தரை உள்ளே வருமாறு அழைத்தபோது அவர் நான் மட்டும் வரமாட்டேன் ஊடவியலாளர்களுயும் உள்ளே அனுமதியுங்கள் என கூறிய போது மாணவர் ஒன்றிய பிரதிதிகளும் அவ்விடத்தில் உள்ளபோதே அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com