பல்கலை மாணவர் கவனஈர்ப்பு போராட்டம் – காற்றில் பறந்த வாக்குறுதிகளும் காலக்கேடுக்களும் !!

யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும் என தெரிவித்தும் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்ட போது மாணவியின் பெற்றோரைச் சந்தித்த ஜனாதிபதி சிறப்பு நீதிமன்ற விசாரணை, வீட்டுத்திட்டம் என வாக்குறுதிகள் வழங்கியிருந்தார். அதேபோல பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் ஒரு மாத்திற்குள் துரித நடவடிக்கை கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களிற்கு நட்டஈடு என ஜனாதிபதியால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

எனினும் அவ்வாக்குறுதிகள்  இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையிலேயே இன்றைதினம் இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு மாத காலக்கேட்டினை பல்கலைக்கழக சமூகம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com