சற்று முன்
Home / செய்திகள் / பல்கலை மாணவர்கள் மக்களுடன் கூட்டாக இணைந்து நினைவேந்தல் – தமது கோரிக்கைகளை முதல்வர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிப்பு

பல்கலை மாணவர்கள் மக்களுடன் கூட்டாக இணைந்து நினைவேந்தல் – தமது கோரிக்கைகளை முதல்வர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை முன்னெடுப்பது தொடர்பான மக்களது உணர்வுகளிற்கும் தங்களினதும் கோரிக்கைக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் மதிப்பளித்துள்ளதாக தெரிவித்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் திட்டமிட்டவாறு மக்களுடன் கூட்டாக இணைந்து முள்ளிவாய்க்கால் நிகழ்வை முன்னெடுக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம் வடமாகாண முதலமைச்சருடன் சந்திப்பிற்கும் கோரிக்கை விடுத்திருந்தது. அக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு இன்று சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் சந்திப்பு நடைபெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் மாணவ பிரதிநிதிகளும் மதத்தலைவர்கள், மூத்த போராளிகள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் பின்னராக ஊடகங்களிடையே மாணவ பிரதிநிதிகள் பேசியிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை மக்கள் மயப்பட்ட நிகழ்வாக முன்னெடுப்பது தொடர்பாக உரையாடப்பட்டது.

எம்மால் முதலமைச்சரிடம் சில கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதனை அவர் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

குறிப்பாக வடமாகாணசபை ஏற்கனவே முன்னேற்பாடுகள் தொடர்பில் பல்வேறு அமைப்புக்களிடமும் வேலைகளை ஒதுக்கியிருப்பதால் அவற்றை மாணவர் பிரதிநிதிகளிடமும் பொது அமைப்புக்களிடமும் கையளிப்பது தொடர்பான கூட்டம் நாளை முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ளது. இதில் மாணவ பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்பினனர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனிடையே நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,பொது அமைப்புக்கள் முள்ளிவாய்க்கால் மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளோம் – என்றனர்.

எனினும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஒரு சிலர் நிகழ்வை மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் கையளிப்பது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டதோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com