சற்று முன்
Home / Uncategorized / பல்கலை. மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நோக்கிய உந்துருளி பேரணி ஆரம்பமானது

பல்கலை. மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நோக்கிய உந்துருளி பேரணி ஆரம்பமானது

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கிய உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று காலை ஆரம்பமானது.
பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.
வலி சுமந்த முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி மாபெரும் உந்துருளிப் பேரணி என்ற தொனிப்பொருளில் மாணவர்கள் இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com