பல்கலையில் மது உண்டு ”அறிக்கை வெளியீட்டு வெற்றி” கொண்டாடப்பட்டதா?

(14.08.2015) நேற்றையதினம் யாழ் பல்கலைக்கழக பீடங்களின் ஒன்றியம் என்ற பெயரில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை போலியானது என மாணவர் ஒன்றியப் பிரதிதி ஒருவர் தேர்தல் மேடை ஒன்றில் ஏறி பரபரப்புக் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தநிலையில் குறித்த அறிகையை வெளியிட்டபின் வெளியீட்டிற்கு ஒத்துளைப்பு வழங்கியவர்களிற்கு காவலாளியின் அறையில் வைத்து மதுபானங்கள் பரிமாறப்பட்டு விருந்தளிக்கப்பட்டதாகவும் அவற்றை கண்ணுற்ற வணிக பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பல்கலைக்கழக செயற்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்ட அருவருக்கத்தக்க அச் செயலை உயர் மட்டங்களிற்கு கொண்டு செல்ல முற்பட்டபோது அவ்விடையத்தில் தலையிட்ட இன்னொரு பேராசிரியரின் முயற்சியின் பலனால் இவ்விடையம் மூடிமைறைக்கப்பட்டதாக சம்பவங்களை நேரில் கண்ட யாழ் பல்கலைக்கழக வணக பீட மாணவர்கள் சிலர்  தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் என்ன நடைபெறுகின்றது என்றே தெரியவில்லை எனவும் முன்னைய மூதவையினர் அங்கு இருந்த காலத்தில்அரசியல் நியமனங்கள் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டினைத்தவிர இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகளிற்கு இடமளிக்கவில்லை எனவும் இவர்கள் பல்கலைக்கழகத்தின் புனிதத்துவத்தைச் சீரழிக்கின்றார்கள் எனவும் அம் மாணவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com