பல்கலைக்கழக நிர்வாக சங்கத்தை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு ஊழியர் சங்கம் சவால்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை (08.09.2017) தொடக்கம் வேலைப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றது. இந்நிலையில் ஊழியர் சங்கத்தின் போராட்டம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் ஒன்றியம் வெளியிட்டிருந்தது. அதில் ஊழியர் சங்கத்தின் பிரதான கோரிக்கைகள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில், தமது கையறு நிலையை மூடி மறைப்பதற்காக தமது போராட்டத்துக்கான கோரிக்கையை மாற்றிக் குத்துக்கரணமடித்து தற்போது முன்னைய கோரிக்கைகளுக்கு சற்றும் பொருத்தமற்ற வகையில் புதிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து போராட்டத்தை தொடர எத்தனிக்கிறார்கள். என்று குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்நிலையில் பதில் அறிக்கை ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிக்கை வெளியிட்ட நிர்வாக உத்தியோகத்தர்களை பகிரங்க விவாதத்துக்கு அழைத்துள்ளது. இது தொடர்பில் ஊழியர் சங்கத்தினால் விடுக்கப்பட்ட செய்திக் குறிப்பில்,
“எம்மால் யாழ் பல்கலையில் நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் சம்பந்தமாக பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையானது ஊடகங்கள் வாயிலாக எமக்கு அறியக்கிடைத்தது.
அவ்வறிக்கையில் உண்மைக்கு புறம்பான பல விடயங்கள் உள்ளன. அவற்றை நாம் மறுக்கின்றோம். எமது போராட்டம் தொடர்பில் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளோம். நிர்வாக உத்தியோகத்தர்கள் அவ்விடயங்கள் குறித்து விவாதிக்க விரும்பின் நாங்கள் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பகிரங்கமாக விவாதிக்கவும் விளக்கம் தரவும் தயாராகவுள்ளோம்.” – என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com