பலாலி ஆசிரியர் கலாசாலையை சொந்த இடத்தில் மீள இயங்க வைக்க தீர்மானம்

பலாலி ஆசிரியர் கலாசாலைலை சொந்த இடத்தில் இயங்க வைக்கவும் கற்கை நெறிகளை மீள ஆரம்பிக்கவும்  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டச் செயலகத்தில் 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் இக்னேசியஸினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே பலாலி ஆசிரியர் கலாசலையை சொந்த இடத்தில் இயங்கவைக்கவும் கற்கை றெநிகளை மீள ஆரம்பிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு அதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ள ஆவண செய்வதாகவும் இணைத்தலைவர்கள் உறுதியளித்தனர்.

அங்கு கருத்துத் தெரிவித்த பலாலி ஆசிரியர் கலாசாலை அதிபர் தெரிவித்ததாவது,

பலாலி ஆசிரியர் கலாசாலை பலாலியில் 54 பரப்புக் காணியில் இயங்கிவந்தது. எம்மால் 13 இற்கும் மேற்பட்ட துறைகளிற்கான ஆசிரியர் பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டன. ஆகால் தற்போது ஒரு கற்கை நெறியைக் கூட வழங்க முடியாத சூழல் காணப்படுகின்றது. கொஞசம் கொஞ்சமாக கற்கை நெறிகள் பிடுங்கப்பட்டு இறுதியாக ஆங்கிலமும் முகாமைத்துவ உதவியாளர் பயிற்சி நெறியுமே இருந்தது. தற்போது அவையும் நிறுத்தப்பட்டுவிட்டன.

இங்கு கற்பித்த ஆசிரியர்களை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு மாற்றிவிட்டார்கள். தற்போது இங்கு ஆசிரியர்களும் இல்லை, கற்கை நெறியும் இல்லை. தளபாடங்களும் இல்லை.  எனக்கும் இடமாற்றம் வந்துள்ளது. நானும் சென்றுவிட்டால் பலாலி ஆசிரியர் கலாசாலை என்ற ஒன்று இல்லாமலே போய்விடும். எனவே தற்காலிகமாக வேறு இடத்திலாவது உடனடியாக கற்கை நெறிகளை தொடங்குவதற்கும் சொந்த இடத்தில் மீள இயங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com