பலாலியில் மாலைநேர  கல்வி நிலையம் திறந்து வைப்பு 

கருணை உள்ளம் சமூக சேவை அமைப்பினால் பலாலி மற்றும் வளலாயில் வசித்து வரும் மாணவர்களின் கல்வியை முன்னேற்றும் முகமாக மாலை நேர கல்வி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது .

11.01.2018 இன்று அச்சுவேலி பங்கு தந்தை .ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிய நிகழ்வில் வலி வடக்கு உதவி அரசாங்க அதிபர் ,J /254 கிராம சேவை அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ,அச்சுவேலி உதவி பங்குத்தந்தை ,மற்றும் அருட்சகோதரிகள், யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் ,கருணை உள்ள இயக்குனர் ,பலாலி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க நிர்வாகத்தினர் ,வளலாய் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க நிர்வாகத்தினர் ,அந்தோனியார் ஆலய நிர்வாகத்தினர் ,தாய்மார் கழக நிர்வாகத்தினர் , இளைஞர் மண்றத்தினர்,விண்மீன் விளையாட்டு கழகத்தினர் , மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்து வைத்தனர்.

இன் நிகழ்வின் இறுதியில் கருணை உள்ள இயக்குனர் திரு.ஜெனிஸ்ரன் அவர்கள் மீழ் குடியேற்றம் செய்யப்படாத பலாலி மக்களின் நிலை பற்றி உதவி அரசாங்க அதிபரிடம் எடுத்து கூறினார் .

இதனை கருத்தில் கொண்ட உதவி அரசாங்க அதிபர் மக்களின் நலன் கருதி சில ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.

நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com